பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட டியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள், காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் யூ டியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4ஆம் தேதி சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர், தன்னுடன் பாதுகாப்பிற்காக வந்த ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் தன் கையை முறுக்கி தாக்கியதாக நீதிபதியிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து இரண்டாவது நாளாக சவுக்கு சங்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.
இதனிடையே சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பிய வழக்கில் ரெட் பிக்ஸ் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த வாரம் டெல்லியில் கைது செய்யப்பட்டுவிட்டதால் அவரது முன் ஜாமின் மனு காலாவதி ஆகிவிட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.