அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலைய மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வழக்கம் போல சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலர் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது பேருந்து நிலையத்திலிருந்த மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர்கள் பேருந்துகளை அவசர அவசரமாக எடுத்துச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள், மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.