அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், 50 சதவீதம் இடங்கள் அதிகரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 164 அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க இதுவரை ஒன்று புள்ளி 81 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், இது 4 லட்சத்தைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அரசின் செயல் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி படிப்பை தடை ஏற்படுத்தும் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கும் வகையில், அரசு கல்லூரிகளில் 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். நடப்பாண்டிலேயே 50 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவுத்திறன் சார்ந்த படிப்புகளைத் தொடங்க வேண்டும்” என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.