மும்பை காட்கோபரில் ராட்சத பேனர் விழுந்து 16 பேர் பலியான நிலையில், அந்த விபத்தின்போது பதிவான புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் அண்மையில் வீசிய சூறைக்காற்றில் ராட்சத பேனர் விழுந்து 16 பேர் பலியாகினர். 40-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது காரில் பயணித்தவாறு ஒருவர் தனது கைப்பேசியில் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.