கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய சாமி கோயிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 9ஆம் நாளில் தேர்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்.