கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும் அதனை செயல்படுத்தவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு பிரச்சாரம் செய்ய சென்றாலும் மதுபான ஊழலை மக்கள் மறக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்பு இருந்தும் பாஜக அதனை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
பெரும்பான்மை எட்டாத பட்சத்தில் பாஜகவிடம் பிளான் பி திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, 60 சதவீதத்திற்கு கீழே சென்றால் தான் பிளான் பி திட்டம் தேவைப்படும் என்றும், ஆனால் பாஜக கூட்டணி 400க்கு அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி அசுர பலத்துடன் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் அமித் ஷா கூறினார்.