புல்லட் ரயில் மூலம் நிலவு சுற்றுலா ஜப்பானின் அசத்தல் திட்டம்!
Sep 10, 2025, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புல்லட் ரயில் மூலம் நிலவு சுற்றுலா ஜப்பானின் அசத்தல் திட்டம்!

Web Desk by Web Desk
May 18, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவுக்கு சுற்றுலா போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. புல்லட் இரயில் மூலம் நிலவுச் சுற்றுலாவுக்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது . நிலவுக்கு மட்டுமில்லை செவ்வாய் கிரகத்துக்கும் போய்வரலாம் என்று ஜப்பான் அறிவித்துள்ளது. கிரகங்களுக்கு இடையிலான பயணத்தை ஜப்பான் எவ்வாறு திட்டமிடுகிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

விண்வெளி சுற்றுலா கனவை நனவாக்க ஜப்பான் விஞ்ஞானிகள், கிரகங்களுக்கு இடையே செல்லக் கூடிய புல்லட் இரயிலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். கஜிமா கன்ஸ்ட்ரக்ஷனுடன் இணைந்து ஜப்பானில் உள்ள க்யோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிரகங்களுக்கு இடையேயான போக்குவரத்து அமைப்பு ( Hexatrack) ஹெக்ஸா ட்ராக் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரயில் பாதையில் , புவியீர்ப்புக்கு ஏற்ப நீண்ட தூரம் பயணிக்கும் வகையில் 1G ஈர்ப்பு விசையுடன் செயல்படும் புல்லட் இரயிலை ஜப்பான் உருவாக்கி வருகிறது.

பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு இடையே ஓடும் இந்த புல்லட் இரயில் தான் space express எனப்படும் விண்வெளி இரயில் ஆகும். இந்த இரயில்கள் அறுகோண வடிவத்தில் இருப்பதால், ‘hexacapsules ‘ஹெக்ஸாகேப்சூல்கள்’ என்று அழைக்கப்படுகிறது .

பூமியையும் சந்திரனையும் இணைக்கும் காப்ஸ்யூல் 15 மீட்டர் சுற்றளவு கொண்டதாகவும், சந்திரனில் இருந்து செவ்வாய் கிரகத்தை இணைக்கும் காப்ஸ்யூல் 30 மீட்டர் சுற்றளவு கொண்டதாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர நிலையம் என்று நிலவில் உள்ள நிலையமும், செவ்வாய் நிலையம் என்று செவ்வாய் கிரகத்தில் ஒரு நிலையமும் அமைக்கப்பட்டாலும் , நிலவில் உள்ள நிலையத்தின் நுழைவாயில் செயற்கைக்கோளாக பயன்படுத்தப்படும் என்றும், அதுபோல் பூமியில் உள்ள நிலையம் Terra Station டெர்ரா நிலையம் என்றும் அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி இரயில் திட்டம் நிறைவேற இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லப்பட்டாலும், இதற்கான கட்டமைப்புக்களின் மாதிரிவடிவங்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் முடிந்துவிடும் என க்யோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

கிரகங்களுக்கு இடையேயான புல்லட் ரயில் சுற்றுலா என்பது ஜப்பானின் தொலைநோக்கு திட்டம். உலக விண்வெளித் துறை ஆய்வில் ஒரு அற்புதமான தொடக்கம்.

2030 ஆம் ஆண்டுக்குள் நிலவில் மனிதர்கள் வாழவும்,வேலை செய்யவும் முடியும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில்,அமெரிக்கா, அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது

நிலவில் அதிநவீன இரயில் நிலையம் அமைப்பதில் மும்முரம் காட்டி வரும் அமெரிக்காவுக்குப் போட்டியாக ஜப்பானும் புதிய திட்டத்துடன் களமிறங்கி இருக்கிறது.

சாதாரணமாகவே இரயில் பயணம் ஒரு இனம் புரியாத நல்ல பயண அனுபவத்தைத் தரும். இதில் , கிரகங்களுக்கு இடையே விண்வெளி வழியாக இரயில் பயணம் என்றால் சொல்லவா வேண்டும்?

ஏதோ பக்கத்து வீட்டுக்குப் போய்வருவது போல, வருங்காலத்தில் விண்வெளி வீரர்கள் அடிக்கடி விண்வெளிக்குச் சென்று வருவார்கள். கூடவே மக்களும் விண்வெளி சுற்றுலா போவார்கள் என்று எதிர்பார்க்கலாம் .

Tags: Lunar tourism by bullet train Japan's crazy plan!
ShareTweetSendShare
Previous Post

ஹல்திராம்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற போட்டா போட்டி!

Next Post

இன்றைய பெட்ரோல் விலை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies