பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவி காவிய ஜனனிக்கு கல்லூரி படிப்புச் செல்வை ஏற்றுக்கொள்வதாக எல்ஐசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ‘பேரையூர்’ கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் காவிய ஜனனி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
அவரை கௌரவிக்கும் வகையில், மதுரை கோட்டம் எல்ஐசி நிறுவனம் சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.