நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராதிகா சரத்குமார் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமாரை, திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மேலாளர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.