தேனி ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு பத்திரகாளியம்மன்னுக்கு பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து வண்ண மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மன், யானை வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.
மேள தாளம் முழங்க வலம் வந்த அம்பாளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.