அமெரிக்காவில் சமூக ஊடக சவாலுக்காக அதிக காரமுள்ள சிப்ஸ்களை சாப்பிட்ட 14 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தது, பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஹாரிஸ் வோலோபா என்ற 14 வயது சிறுவன், சமூக வலைதளங்களில் பிரபலமான “One Chip Challenge” என்ற சவாலில் பங்கேற்பதற்காக, அதிக காரமுள்ள சிப்ஸ்களை சாப்பிட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்தார்.
அச்சிறுவனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
காரமான உணவை உண்டதால் இதயம் அதிகமாக விரிவடைந்ததே அவரது மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.