கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகை ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வரும் நிலையில், அவ்விழாவில் அவர் அணியும் உடைகள் பேசுபொருளாவது வழக்கம்.
இந்த வருட விழாவில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய், கருப்பு நிற உடையணிந்து சிவப்புக் கம்பள அணிவகுப்பில் பங்கேற்றார்.