ரஃபா மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் போரை எதிர்த்து தென்னாப்பிரிக்கா கடந்த ஜனவரி மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இனப்படுகொலைக்கு வழிவகுக்கக் கூடிய சூழல் உள்ளபோதும், ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும், 1949 இனப்படுகொலை உடன்படிக்கையை இஸ்ரேல் மீறுவதாகவும், தென்னாப்பிரிக்க வழக்கறிஞர் டெம்பேகா குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்துள்ள நிலையில், இன்று சர்வதேச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.