திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் சுமார் 76 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
300 ரூபாய் சிறப்பு டோக்கன் பெற்றவர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். உண்டியல் காணிக்கையாக மூன்று கோடியே 63 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.