தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 முதல் ஆயிரம் கனஅடி வரை மட்டுமே இருந்தது.
நீர்வரத்து மிகவும் குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆறு, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சிறு சிறு குட்டைகளாக காட்சியளித்தன.
இந்நிலையில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், நீர்வரத்து திடீரென 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.