தேனி மாவட்டம், வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி உயிரிழந்தார்.
ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார், சென்னை தாம்பரத்தில் தீயணைப்புத் துறை வீரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கோயில் திருவிழாவுக்காக சொந்த ஊர் வந்த சதீஷ்குமார், தனது நண்பர்களுடன் வைகை அணையில் உள்ள செக்டேமுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், சதீஷ்குமார் திடீரென சுழலில் சிக்கி நீருக்குள் மூழ்கினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏராளமான தீயணைப்புத் துறையினர், பள்ளத்தில் சிக்கியிருந்த சதீஷ்குமாரின் உடலை மீட்டனர்.