கோடைகாலத்தை ஒட்டி தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் தென்காசி மாவட்டம், செங்கோட்டைக்கு வந்த போது சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
கோடைகாலத்தை ஒட்டி தாம்பரம் முதல் கேராள மாநிலம் கொச்சுவேலி இடையே வாரத்திற்கு இருமுறை ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட இந்த சிறப்பு ரயில் செங்கோட்டை நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ரயில் பயணிகள் சங்கத்தினர் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.