கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கிய நிலையில் பிரையண்ட் பூங்காவில் சுமார் 5 லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு வருடமும் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை வேளாண்மை உற்பத்தி கழக ஆணையர் அபூர்வா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் திறந்து வைத்தனர்.
கண்காட்சி நடைபெறுவதையொட்டி பிரையண்ட் பூங்காவில் சால்வியா, கேலண்டலா, சிங்க முகப் பூ, ஜினியா, ரோஜா செடிகள், டேலியா, லில்லியம், ஸ்டார் பிளக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான பல லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாரத்தான் ஓட்டம், சைக்கிள் போட்டி, மீன் பிடி போட்டி உள்ளிட்ட பல போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.