கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் இளம்பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் உள்ளிட்ட அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியவந்து உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி மறைவதற்குள், கோவேக்சின் தடுப்பூசியும் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட 926 பேரை, கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஆகஸ்டு வரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வந்தனர்.
ஆய்வில் சுமார் 3-ல் ஒரு பங்கினருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதும்…
ஒரு சதவீத நபர்களிடம் பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகள் பதிவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி போட்டவர்களில் ஏற்பட்ட 4 மரணங்களில், மூவர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது.