கனமழை காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புடன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாளை முதல் வருகிற 20-ம் தேதி வரை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால், களப்பணி மேற்கொள்ள 3 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.