நெல்லை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையின் காரணமாக 8500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலில் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், தமிழக மீன்வளத்துறை சார்பில் மாவட்டத்தின் கடலோர பகுதிகளான கூட்டப்புளி, பெரியதாழை ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் மீனவர்கள் மீன்பிடி வலைகளை பழுது பார்க்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.