நெல்லை மாவட்டம் சிவந்திபுரம் அடுத்த ஆறுமுகம்பட்டி பகுதியில் பொதுமக்களை மந்தி குரங்கு துரத்தி துரத்தி கடிப்பதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
அம்பாசமுத்திரம் அருகே ஆறுமுகம்பட்டி பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, டிராக்டர் டிரைவர் பெரியசாமி மகன் கிளாட்சன் என்பவரை மந்தி குரங்கு ஒன்று துரத்தி, துரத்தி கடித்துள்ளது.
இதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் மயங்கி விழுந்தார். அவரை சகபணியாளர்கள் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், மூன்று பேரை மந்தி குரங்கு கடித்ததால், அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மந்தி குரங்கை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.