காங்கிரஸும், சமாஜ்வாடியும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலை இடித்து விடுவார்கள் என்றும், பாலராமர் மீண்டும் கூடாரத்திற்கு செல்ல நேரிடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று பேச்சு எழுந்ததாகவும், அது சாத்தியமில்லை என மக்கள் எண்ணியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் நாட்டை பிரித்து காட்டியதாகவும் மோடி குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர்கள் என்றும், அவர்களைப் பொறுத்தவரை, குடும்பமும், அதிகாரமும் தான் பெரியது என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பாலராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்புவர்கள் என்றும், புல்டோசர் மூலம் ராமர் கோவிலை இடிப்பார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.