திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், திருச்சியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக, 4 நாள் பயணமாக கடந்த 14-ம் தேதி திருச்சி வந்தடைந்தார்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அவர் தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் மற்றும் ராமானுஜர் சன்னதியில் அவர் தரிசனம் செய்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வருகையை ஒட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.