திருச்சியில் தெரு நாய்கள் கடித்து 3 பேர் படுகாயமடைந்த நிலையில், நாய்களை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காமநாஜபுரத்தை சேர்ந்த பிருந்தா, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவி சுதா ஆகிய 2 மாணவிகள் உள்ளிட்ட 3 பேரை தெரு நாய்கள் கடித்து குதறியது.
இதில் படுகாயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.