தான் தாக்கப்பட்ட விவகாரத்தில் உண்மை ஒரு நாள் வெளிவரும் என ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிசிடிவி மற்றும் புகைப்பட பதிவுகளும் இணையத்தில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட பதிவில், ஒருவர் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் முதல்வர் வீட்டில் பதிவான சிசிடிவி பதிவை ஆராய்ந்தால் உண்மை முற்றிலும் வெளிவரும் என்று கூறிய அவர், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.