ராமநாதபுரத்தில் எதிர் புகார்தாரர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு, லஞ்சம் கேட்ட காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தொண்டி அருகே பெருமானேந்தலைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கும், இவரது உறவினர்களுக்குமிடையே சில நாட்களாகவே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் உறவினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, 3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.