ஈரோட்டில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்க தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறி வங்க தேசத்தை சேர்ந்த இருவர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.