ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலே காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,
தாக்குதல் நடத்தப்பட்டு 3 நாட்கள் வரை, ஸ்வாதி மாலிவால் காவல்துறையில் புகாரளிக்கவில்லை எனவும், கட்சியின் மேல்மட்டத்திலிருந்து அழுத்தம் அளிக்கப்பட்டதே அதற்குக் காரணமெனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியுமா? என டெல்லி பெண்கள் கேள்வி எழுப்புவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.