உத்தரபிரதேசத்தில் குண்டர்களின் கொட்டத்தை ஒடுக்கியவர் முதல்வர் யோகி ஆதித்யநாத் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில், பாஜக வேட்பாளரை ஆதரித்து அமித்ஷா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது ராகுல் காந்தி குடும்பத்தினரை தங்களது குடும்ப உறுப்பினர்களாக கருதும் ரேபரேலி, அமேதி மக்களை, காந்தி குடும்பத்தினர் உதாசினப்படுத்துவதாக அவர் குற்றச்சாட்டினார்.
அதேசமயம் மோடி ஆட்சியில் உத்தர பிரதேசம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.