டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது உதவியாளரை தாமாக முன்வந்து போலீஸில் ஒப்படைக்க வேண்டுமென மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
முதல்வர் முன்பாகவே பெண் எம்.பி. தாக்கப்பட்ட போதிலும், முதல்வரும், இண்டி கூட்டணி கட்சியினரும் மெளனம் காப்பதாக குற்றம்சாட்டினார்.
இதேபோல தான் மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதும் இண்டி கூட்டணி அமைதி காத்ததாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.