புதிய சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின்நிலையத்துக்கு, இந்தோனேசியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் வடசென்னையில் 800 மெகாவாட் திறன் கொண்ட, நவீன உபகரணங்களுடன் கூடிய சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.
இங்கு கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற சோதனை ஓட்டத்தில், எண்ணெய் மற்றும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தி 100 மில்லியன் யூனிட்களுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின்நிலையத்துக்கு, இந்தோனேசியாவில் இருந்து 13 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டெண்டர் தொடர்பாக ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் கூறப்படுகிறது.