சீர்காழி அருகே மீண்டும் இரண்டு சிறுவர்களை தெரு நாய்கள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைமடம் பகுதியில் தர்ஷன், தர்ஷாத் ஆகிய இரண்டு சிறுவர்களை தெரு நாய்கள் கடித்தது.
இதில் காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீர்காழியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவது பெற்றோரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.