பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 4 பேர் காயமடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் உணவு வாங்குவதற்காக வரிசையில் நின்ற போது பேரின்பராஜ், மணிகண்டன், ராஜகோபால், விக்னேஷ் ஆகிய 4 பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.