ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யை தாக்கியதாக எழுந்த புகார் பற்றி விசாரிக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து மகளிர் ஆணையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் வீட்டுக்கு நோட்டீஸ் வழங்க அதிகாரிகள் சென்றபோது அதை அங்கிருந்தவர்கள் ஏற்காததால், வீட்டின் வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, மே 18-இல் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.