திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவிலின் 64ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு பொங்கல் வைத்தும், தீபாராதனை காட்டியும், பக்தர்கள் வழிபட்டனர். இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆலய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.