சென்னையில் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர் மார்க்கெட் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற்று வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் ஆய்வு மேற்கொண்ட போலீசார், ஆட்டோவில் வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த துப்புரவு பணியாளரான பார்த்திபன் மற்றும் அவர்து நண்பர் ரஞ்சித் ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஆயிரத்து 140 போதை மாத்திரைகள், 20 ஆயிரம் ரூபாய் பணம், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.