கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவதாக இந்தியர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இருப்பினும் இதுதொடர்பாக கனாடாவிலிருந்து அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.