புதுக்கோட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பயிற்சி வழங்கப்பட்டது.
வண்டிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் துப்புரவு பணியாளர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை எவ்வாறு கையாள வேண்டுமென்றும், ஆபத்து காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியினை இந்தியன் ஆயில் மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரேமா துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.