ஒரு சில தொழிலதிபர்களுக்கு தான் சலுகை காட்டியது நிரூபணமானால், தன்னை பொதுவெளியில் தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.
அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு சாதகமாக மத்திய அரசு நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
நாட்டின் வளத்தைப் பெருக்குபவர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், இதில் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தால், அதற்கான தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாகவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சாதனையாளர்களைத்தான் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அழைத்து கெளரவித்ததாகவும், அவர்களை கெளரவிக்காவிட்டால் எப்படி விஞ்ஞானிகளையும், பி.எச்.டி. ஆய்வாளர்களையும் உருவாக்க முடியும் என்றும் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.