ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பர்வீன் ஹூடா சர்வேத விளையாட்டுப்போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பர்வீன் ஹூடா வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
பொதுவாக, விளையாட்டு வீரர்கள் 12 மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று முறை ஊக்கமருந்து பரிசோதனை தரவுகளை, உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையிடம் சமர்ப்பிப்பது வழக்கம்.
அந்த வகையில், வீராங்கனை பர்வீன் ஹூடா ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனால், அவர் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 18 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால் பர்வீன் ஹூடா பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.