புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சார்பதிவாளரை தாக்கி அவர் வைத்திருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து சென்ற பத்திர எழுத்தர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பிளமன் தாஸ் மற்றும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மணிகண்டன் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்ட காமாச்சி அம்மன் கோயில் நில அபகரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.