மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின்கீழ் தமிழகத்தில் பாஜக வேகமாக வளருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அண்ணாமலையும், தெலங்கானாவில் மாதவி லதாவும் பாஜகவில் வேகமாக வளர்ந்து வரும் தலைவர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் தனக்காக வடக்கு மும்பை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பியூஷ் கோயல் கூறினார்.