பீகார் தலைநகர் பாட்னாவில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது மாணவன் பலியானதால், ஆவேசம் அடைந்த மக்கள் பள்ளிக்குத் தீ வைத்தனர்.
பாட்னா டிகா காவல் நிலையத்துக்கு உள்பட்ட ராம்ஜிசாக் பள்ளியில் படித்து வந்த 3 வயது மாணவன், அந்தப் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தான்.
அவனது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள், அந்தப் பள்ளியைச் சூறையாடி, தீ வைத்தனர்.
இதனிடையே, சிறுவனின் சாவுக்கு காரணமான 3 பேரை கைது செய்திருப்பதாக பாட்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திர பிரகாஷ் தெரிவித்துள்ளார்.