மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, பில் கலெக்டர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கண்ணனேந்தல் விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியரான பரசுராமன் என்பவர், கடந்த 13-ம் தேதி சொத்து வரி பெயர் மாற்றத்துக்காக மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
அதன்பேரில் இடத்தை நேரடியாக கள ஆய்வு செய்த பின்னர், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பில் கலெக்டர் ஆறுமுகம், உதவியாளர் சண்முகம் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர்.