விருதுநகர் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிறப்பு ரயில் நரிக்குடி ரயில்வே நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது.
அப்போது இளைஞர் ஒருவர் நிலை தடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். அப்போது ரயில் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே அவர் பலியான நிலையில் தகவலறிந்த விரைந்து வந்த போலீசார் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்.