தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, நான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
“தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்” என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கையை அடுத்து, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகியநான்கு மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் தலா 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்கள் முகாமிட்டுள்ளனர்.
“அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்” என மாநில பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, “தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அரக்கோணத்தில் கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.