ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். பிருந்தாவனம் சென்றுவிட்டு 64 பேர் பேருந்து ஒன்றில் ஹரியானாவில் உள்ள நூ பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அதில் இருந்த 8 பேர் உடல் கருகி பலியாகினர்.
25-க்கும் அதிகமானோர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு நூ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அப்பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.