மயிலாடுதுறையில் உயிரிழந்த தந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக கூறி, மகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழையூர் கே.கே.நகரை சேர்ந்த கலைச்செல்வன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெயிண்டிங் வேலை செய்துகொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கலைச்செல்வனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவர்கள் அலைக்கழிப்பதாக கூறி கலைச்செல்வனின் மகன்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டம் கைவிடப்பட்டது.