தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், கனமழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.